December 2, 2008

வர்த்தக பூமியில் வளமிக்க வளாகத்தில்
வண்ண வண்ண விளக்குகள் வட்டமிட்டு
விண்ணை முட்டி வியப்பூட்டும் அழகை
வியந்து ரசித்த வெளிநாட்டவர்கள்
தங்கியருந்த தாஜ் ஹோட்டலில்
தரங்கெட்ட மனிதர் தான் நுழைந்து
கண்ணில் பட்ட மனிதர்களைத் தன்
கட்டுப் பாட்டில் அடைத்து வைத்து
துளைக்கின்ற துப்பாக்கி குண்டுகளால்
சளைக்காமல் சட்டெனவே சுட்டனரே
எதிர்த்தவரை ஏனென்று கேட்காமல்
எதிரில் நின்று சுட்டனரே
பதைபதைத்து அனைவரும்
பதுங்கினர் சமையல் அறையில்
வெளிநாட்டார் சிலரையும்
உள்நாட்டார் பலரையும்
உயிர் குடித்த அம்மிருகங்கள்
உலவுகின்ற அவலத்தை
என்னவென்று சொல்வேன்
எப்படி மறப்பேன்.

en seyvom

December 2, 2008

வர்த்தக பூமியில் வளமிக்க வளாகத்தில்
வண்ண வண்ண விளக்குகள் வட்டமிட்டு
விண்ணை முட்டி வியப்பூட்டும் அழகை
வியந்து ரசித்த வெளிநாட்டவர்கள்
தங்கியருந்த தாஜ் ஹோட்டலில்
தரங்கெட்ட மனிதர் தான் நுழைந்து
கண்ணில் பட்ட மனிதர்களைத் தன்
கட்டுப் பாட்டில் அடைத்து வைத்து
துளைக்கின்ற துப்பாக்கி குண்டுகளால்
சளைக்காமல் சட்டெனவே சுட்டனரே
எதிர்த்தவரை ஏனென்று கேட்காமல்
எதிரில் நின்று சுட்டனரே
பதைபதைத்து அனைவரும்
பதுங்கினர் சமையல் அறையில்
வெளிநாட்டார் சிலரையும்
உள்நாட்டார் பலரையும்
உயிர் குடித்த அம்மிருகங்கள்
உலவுகின்ற அவலத்தை
என்னவென்று சொல்வேன்
எப்படி மறப்பேன்.

உழைக்கும் கரங்களுக்கு ஒய்வு

ஜூன் 19, 2008

58  ஆம் அகவை ஆண்களுக்கு மட்டும்தான்
அலுப்பூட்டி ஓய்வைத் தேடுமோ ?
 அலுவலக ஓய்விற்கு அப்பால் ஆணால்
அலுவல் ஏதும் பார்க்க இயலாதாம்
அரை நொடியும் ஓய்வின்றி  அதிகாரத் தொனியுமின்றி
அடுப்படியில் நின்று அவஸ்தைப் படும் பெண்ணும்
58  ஆம் அகவையில் ஒய்வு பெறுதல் நலமென்று
ஐயமின்றி சொன்னால் நன்று என்பீரோ
15 வயதில் பயின்று வந்த சமையல் கலை -கைப்
பக்குவத்தால் பலவிதமாய் பலவிருந்து படைத்தாலும்
ஒருநாளும் ஓய்வின்றி பலமுறை சமைத்தாலும்
அறுபது வயதிலும் அலுப்பின்றி சமைக்க வேணும்
அலுவலகம் செல்லும் பெண்ணானாலும் அரசாங்க ஒய்வு
அட்டியின்றி கிடைத்தாலும் அடுப்படி ஒய்வு மட்டும்
அவளுக்கும் கிடையாது அதை மறுக்க முடியாது
அது என்ன நியாயம் அப்படி ஒரு சட்டம்
இச்சட்டத்தை மாற்றி இனிப் பெண்களும்
இன்பமுடன் ஓய்வுபெற ஓட்டளிப்போம்
இருவருக்கும் ஒய்வு அல்லது
இருவரும் சேர்ந்து சமைப்போம்
இதுதான் சட்டம் என்று எழுத்தில் வடிக்காமல்
இதயத்தால் ஒன்றுபட்டு இனிதான முடிவெடுப்போம்
 

மகளுக்கு ஒரு கவிதை

ஜூன் 17, 2008
பள்ளிக்கூட இதழுக்கு
பாங்கான  கவிதை ஒன்றும் 
சிங்காரமாய் சித்திரம் ஒன்றும்
வரைந்து வர வேண்டும் என
அன்பு மகள் ஆசையுடன் கேட்டிட
மனதில்  தோன்றிய வரிகளை
மகளுக்குப் புரியும் விதமாக
எழுத்தில் வடித்து எழுதினேன்
 பெண்ணாளும் பாரதத்தில்(1968)
ஆணாகப் பிறந்திட்டால் அதிரஷ்டமில்லைஎன்று
  எண்ணி பெண்ணாகப் பிறந்து வந்து
கண்ணான பெற்றோர்க்கு     களிப்பு மூட்டி
வையத்தில் வந்துதித்த வண்ண மயில் பெண்ணே
அன்பான கவிதை ஒன்று ஆசையுடன் கேட்டு விட்டாய்
என்பால்  நம்பிக்கை வைத்து ஏக்கமுடன் பார்த்து நின்றாய்
கவிதைக்கு கவிதை சொல்ல கசக்குமோ எனக்கு
சித்திரமாய் என்முன் நின்று சித்திரம் கேட்டு விட்டாய்
சித்ராவின் (என்மகள் பெயர்) சிறுகை பிடித்து
சிங்கார ஓவியம் சிறிதாக வரைய விட்டேன்
சிறுவிரல் வரைந்தது சிறப்பான கொடியே
தேசியக் கொடி நாம் வணங்கும் கொடி
நேசமுடன் என் மகளும் வணங்கி நின்று
முத்தமீந்து மகிழ்ந்து பறந்து சென்றாள்
மகளது மகிழ்வில் மனம் நிறைவாக
மறு கவிதைக்கு கரு தேடினேன்.

                                                                           லலிதா

ஈஷா மையம்

ஜூன் 12, 2008

                                               

  வெள்ளிங்கிரி ஈஷா மையத்தில் ஈரிரண்டு நாட்தங்கிய பொழுது மனதில்  எழுந்தவை     
              

               சிட்டுக்கள் இரண்டு சிறகடித்துப்  பறந்தது போல்
                  சிறுமிகள் இருவர் சிலுசிலுவென வந்தனர்
                சிறிய அறையைப் பெருக்கித் துடைத்து
                    சில நிமிடத்தில்  சிரித்தபடியே சென்றனர்.
                                   —————————————————————————

                                                 அங்கு சாப்பிட்ட உணவின் வகைகள்

பச்சையாய்ச்  சாப்பிட காய்கறிகள்
பளபளவென மின்னும் வேர்க்கடலை
கொதிக்கும் சூட்டில் பருப்பு சாம்பார்
கொத்தமல்லி  சட்டினியுடன் இட்லி
மெத்தென்ற சப்பாத்தி இனிப்பு ரொட்டி (பிரட்)
மென்று தின்ன வகைவகையாய்க் கனி வகைகள்
சுவையான ரசத்துடன் சுடும் அரிசிச் சோறு
கீரைப் பொரியலும் குலோப்ஜாமுனும்
அடைப் பிரதமன் பாயாசத்துடன் அளவான கம்பங்கூழும்
 திகட்டாத ருசியுடன் தினமும் உண்டு வந்தேன்
இருந்தாலும் முதல் நாள் இரவில் கடுமையான
தலைவலி காரணம் புரியவில்லை, புரிந்ததும்
தயங்காமல் சென்று தரமான தேநீர்தனை
அருந்தியதும் தலைவலி அகன்றது–தகுமோ இது


Follow

Get every new post delivered to your Inbox.